Events 2018-2019

தமிழ்த்துறை இலக்கிய வட்டம் - " கம்பராமாயணத் தோற்றம் - புதிய நோக்கு " - 05.10.2018

புத்தனாம்பட்டி நேருநினைவுக்கல்லூரி தழிழ்த்துறை சார்பாக 05.10.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கருத்தரங்க கூடத்தில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழ்த்துறை - இலக்கிய வட்டம், சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர்.அ.இரா.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.சோம.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்;. முனைவர் நா.பழனிவேலு, இணைப்பேராசிரியர், தலைவர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி அவர்கள் “கம்பராமாயணத் தோற்றம் - புதிய நோக்கு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தனது சிறப்புரையில் கம்பன் பிறப்பு, வரலாறு மற்றும் சோழர்கள் காப்பிய வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுகளை எடுத்துரைத்து பேசினார். மேலும் கம்பராமாயணத்தின் அரசியல் நிலை, மனித நேயம் குறித்து சிறப்புற மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இக்கருத்தரங்க அமர்வு- 2இல் முற்பகல் 11.00 மணிக்கு திரு.ஜோ.மகேஸ்வரன் MCJ நியுஸ் 18 தமிழ்நாடு, திருச்சி மண்டலத் தலைமைச் செய்தியாளர் “இன்றைய செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். “தமிழ் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பினை இன்றைய செய்தி ஊடகங்கள் வழங்குவதற்கு வழி வகைசெய்கின்றது. சமூக ஊடகத்தின் மூலமாக செய்திகள் அசுரவேகத்தில் மக்களிடம் சென்றடைகின்றது. மாணவ சமுதாயம் அன்னப்பறவைப்போல் இருந்து நல்ல செய்திகளை சமுதாயத்திடம் சென்றடைய உறுதுணை செய்யவேண்டும்” என எடுத்துரைத்து பேசினார். இக்கருத்தரங்க அமர்வு-3இல் முனைவர் க.முருகேசன், இணைப்பேராசிரியர், தலைவர் தமிழ்த்துறை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் அவர்கள் “கம்பன் விடுத்த அம்புகள்” என்ற தலைப்பில் கம்பராமயணத்திலுள்ள அழகிய உவமைகளையும் அணிநலன்களையும் சொல்லோவியமாக வடித்து சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கத்தின் நிறைவாக சுயநிதிப்பிரிவின் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்.என்.ஆர்.சக்திவேல் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


Click here for more photos