தமிழ்த்திரு உலா - 12-07-2019

இளந்தமிழர் இலக்கியப்பேரவை திருச்சி மாவட்டம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் தமிழ்த்திரு உலா என்ற நிகழ்ச்சி 12-07-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிக்கு முடிவுற்றது.நிகழ்வில் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் கீ.கீதா வரவேற்புரை ஆற்றினார். இளந்தமிழர் இலக்கியப்பேரவை சார்பாக கல்லூரிக்கும் தமிழாய்வுத்துறைக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.தமிழைப் பிழையின்றி கற்று உலக அளவில் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர் நியூஸ் 7 செய்தியாளர் க.மகாலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இத்தலைமுறைகள் சமூக அக்கறையோடு இருக்க வேண்டும்.நம் கிராமத்து பிரச்சனைக்கு நாமே தீர்வு காண செயல்பட வேண்டும்.செய்தியாளரை அணுகி சமூகப் பிரச்சனைக்கு வழிகாண இளந்தலைமுறைகள் விழிப்புணர்வு பெற வேண்டும் என சமூக அக்கறையோடு பேசினார். இளந்தமிழர் இலக்கியப்பேரவை திருச்சி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் செல்வி.பிருந்தா அவர்கள் பிற மொழிக்கலப்பின்றி தமிழில் பேச வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இளந்தமிழர் இலக்கியப்பேரவை திருச்சி மாவட்டம் உறுப்பினர் திரு எழில்செல்வன் அவர்கள் கூறும்போது கடவுளால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்மொழி என்றும்,சமயம் ஒருவரைப் பக்குவப்படுத்த வேண்டுமே தவிர மத வெறியைத் தூண்டுதலாக இருக்கக் கூடாது என்றார். மேலும்,கல்லூரித் தலைவர் பொறிஞர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில்.தமிழ் மொழியை நன்றாகக் கற்பதால் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் ;கொள்ளலாம். வேலை வாய்ப்பினை பெறும் அரிய வாய்ப்பினைப் பெறலாம் என்று கூறினார்.

.கல்லூரி ஒருங்கிணைப்பாளர் திரு முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் , முனைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.


Click here for more photos