ரோட்டராக்ட் கிளப் நிறுவுதல் விழா - 12-09-2019

ரோட்டராக்ட் கிளப் நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி நிறுவல் விழா (Installation Ceremony) 12-09-2019 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ரோட்டரி கிளப் சக்தி, திருச்சிராப்பள்ளி(sponsored club) அமைப்பினால் மூக்கப்பிள்ளை கலையரங்கத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்ததோடு இனிதே தொடங்கியது. ரோட்டராக்ட் கிளப் நேரு நினைவு கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் Dr.N.திருநிறைச்செல்வி வரவேற்புரை வழங்கினார்.

நேரு நினைவு கல்லூரியின் தலைவர் பொன்.பாலசுப்புரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நேரு நினைவு கல்லூரியின் முதல்வர் முனைவர். பொன்பெரியசாமி அவர்கள் சிறப்புரை வழங்கினார். நேரு நினைவு கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் Dr.மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவதற்கு வழிநடத்தினார்.

ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி சக்தி-தலைவர் ரோட்டரியன் ஹேமலதா ரோட்டராக்ட் நிறுவல் விழாவினை தொடங்கிவைத்தார். இதில் ரோட்டராக்ட் கிளப் நேரு நினைவு கல்லூரியின் தலைவராக R.எழிலரசி, செயலராக R. நதியா , பொருளாலராக S.பிரித்தி, துணை தலைவராக P.M. சினேகா, துணை செயலராக N. லாவண்யா, மாணவர்களின் ஒருங்கிணைப்பாளராக சாருமதி, ஹரிணி ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டு துணை ஆளுநர் ரோட்டரியன் மகேஷ்கண்ணா அவர்களால் இவர்களுக்கு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் ரோட்டரி கிளப் திருச்சி சக்தி அமைப்பின் தலைவர் ஹேமலதா செயலர் வளர்மதி, சிறப்பு விருந்தினர் Dr. சகிலா சமீர்(First Lady District 3000), கௌரவ விருந்தினர் அல்லிராணி (Priyasaki District Chair) அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். திருமதி . மாலா பாலசுப்புரமணியன் அவர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவதற்கு ஆலோசனையும், ஒத்துழைப்பையும் வழங்கினார்.

மேலும், புகைப்படங்களின் முக்கியதுவத்தை பற்றிய விழிப்புணர்வு ஸ்ரீதர் பாரதி அவர்களால் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் திருச்சி சக்தி செயலர் வளர்மதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சி தேசிய கீதத்தோடு இனிதே நிறைவுற்றது.


Click here for more photos